Sunday, 21 October 2018

பிளாஸ்டிக் புதையல்

நம் வாழ்வின் தொடக்கமே இயற்கை
நம் வாரிசுகளின் தொடக்கமோ செயற்கை

பிறந்த நாள் முதல்
இறக்கும் நாள் வரை பிளாஸ்டிக்

நாம் இதுவரை பூமியை தோண்டி எடுத்து வந்த எல்லாமே செல்வங்கள் தான்.

நிலத்தடி நீர்
தங்கம்
வைரம்
வைடூரியம்
நிலக்கரி
இரும்பு
செப்பு
தாமிரம்
 இன்னும் பல ஏராளமாக உள்ளன.


நாம் இதுவரை வாழ்க்கை முழுவதும் அனுபவித்து கொண்டு இருக்கும் அத்தனை வளங்களும் நாம்மோடு அளித்து விட்டு போகும் வழியில் நாம் அனைவரும் வாழ்கிறோம்.

இந்த நிலையை மாற்ற வேண்டும்
இந்த நிலையை மாற்ற முடியாத நிலையில் இருக்கும் அத்தனை பேரும் நம் வாரிசுகளின் தொடக்கம்
செயற்கையான
போலியான
விசம் மிகுந்த வாழ்வாதாரத்தை புதையல்களாக வழங்க காத்திருக்கிறோம்.

நம்மை பார்த்து நம்மை போல் பூமியை தோண்டி வளங்கள் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து போக போகுது நம் சந்ததிகள்.

பூமியை தோண்ட தோண்ட பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே புதையல்களாக கிடைக்கும்.

இதை அறிந்த நான் திரிந்திவிட்டேன்.
பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணுக்கு விசம்.

மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்துக் கொண்டு கோடை காலத்தில் இன்பமா நீரை எடுத்து பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உதவுங்கள்.

சந்ததிகள் சந்தோஷமாக வாழ வேண்டும்.
பூமியில் பொக்கிஷங்களை விதையுங்கள்..
மரம் காப்பாற்று நம் சந்ததிகளை.
 வேண்டாம் பிளாஸ்டிக்.
 கார்த்திகா சுந்தர்


No comments:

Post a Comment