தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரம் 2018
அனைத்து மக்களும் இனிய தீப திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு தீப திருநாள் அன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
தீப திருநாளில் பட்டாசுகள் வெடித்து மகிழ உத்தரவிடப்பட்ட கால நேரம் தொடர்பாக நம் தமிழக அரசு தற்போது மனுவை தாக்கல் செய்து உள்ளது.
இந்தியா நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்து மகிழ தடை விதிக்க வேண்டி கோரியை முன் வைத்து போடப்பட்ட வழக்குகளை எல்லாம் நம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி உள்ளது.
இத்தகைய வழக்கு விசாரணை முடிவில் நீதிமன்றம் பட்டாசுகள் தயாரிக்கவும், அவர்கள் பட்டாசுகளை விற்கவும் செய்யலாம்.
பட்டாசுகள் போட தடை எதுவும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது.
ஏகப்பட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் விதித்துள்ளது.
அது என்னவென்றால் தீப திருநாளில் இரவு நேரத்தில் 8 மணிக்கு தொடங்கி 10 மணி அளவு வரை பட்டாசுகள் வெடிக்கலாம்.
மொத்தம் 2 மணி நேரம் மட்டும் அனைவரும் பட்டாசுகள் வெடிக்கலாம். அதுவும் வெடிக்கப்படும் ஒவ்வொரு வெடிகளும் அரசு அனுமதி வழங்கிய அளவுகளில் மட்டுமே இருத்தல் கட்டாயமாகும்.
பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் சத்தம் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழலின் பாதிப்பு ஆகியவை குறித்து அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் அளவீடு செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழலுலின் பாதுகாப்பு கருதி மாசு ஏற்படுத்தாத வகையில் பட்டாசுகள் தயாரிக்க தக்க நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.
அரசு தடை விதித்ததுள்ள எந்த ஒரு வகை பட்டாசுகளையும் பொது மக்கள் வெடிக்க அனுமதி கிடையாது என முக்கிய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இந்த வருடம் தீப திருநாள் அன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட 2 மணி நேரங்களுக்கு பதிலாக மேலும் அதிகபடியாக நேரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து உச்சநீதிமன்றத்தில் நம் தமிழக அரசு மனுவை தாக்கல் செய்துவிட்டது.
தீப திருநாள் அன்று காலை 4 மணி முதல் 6 மணி வரை அதிகாலை வேளையில் பட்டாசு வெடித்து கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு நீதிமன்றத்திற்கு வலியுறுத்தல் செய்துள்ளது.
மக்கள் இந்த ஆண்டு தீப திருநாள் கொண்டாட்டதில் பல மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
அனைவரும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.எனவே அளவான பட்டாசுகள் வெடித்து மாசு வெளிப்பாடு குறையும் வகையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட வேண்டும்.
குழந்தைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து கொண்டாட பெற்றோர்கள் உதவ வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
அனைவருக்கும் பாதுகாப்பான இனிய தீப திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
கார்த்திகா சுந்தர்.
No comments:
Post a Comment