Sunday, 21 October 2018

பட்டாபட்டி தாத்தா பணம்


பணம் பணம்
பட்டாபட்டி பணம்

குணம் குணம்
பத்திரமாத்து குணம்

தினம் தினம்
பொன்னான தினம்

மனம் மனம்
மாசு இல்லா மனம்

கணம் கணம்
மடியில் இல்லை கணம்

ரணம் ரணம்
மனசெல்லாம் ரணம்

தெனம் தெனம்
நாட்கள் கழிந்தன தெனம்

இனம் இனம்
ஆசை பிடிச்ச மனுஷ இனம்

பிணம் பிணம்
ஆன பட்டாபட்டி தாத்தா பிணம்

மணம் மணம்
தாத்தாக்காக ஊதுபத்தி  மணம்

பணம் பணம்
என போன சொந்த பந்தம்

பிணத்து முன்ன கூடுச்சம்மா
மனம் திரிந்து சேந்துச்சம்மா

உசுரோட இருக்கையில
ஒரு ஜனம் இல்லையம்மா

உசுரு பிரிஞ்சு போனபின்ன
ஊரு ஜனம் கூடுதம்மா

பட்டாபட்டி தாத்தா மேல
பாசம் இப்போ பொங்குதம்மா

திடீர் பாசம் கொட்டுதம்மா
இது எல்லா

பாசமா...
வேசமா ...
பணம் செய்யும் மோசமா...

என்னானு புரியலையே ...
ஏதுனு தெரியலையே ...

பட்டாபட்டி தாத்தா என்ன
தவிக்க விட்டு போனதென்ன ...

கண்ணில் நீர் வடிய
நெஞ்சில் வலி நிரைய
செல்ல தாத்தா நினைப்போட
உன்ன நினைச்சு அழுகும்
செல்ல பேத்தி நான் தானே .....

கார்த்திகா சுந்தர்


















No comments:

Post a Comment