Saturday, 20 October 2018

மிதக்கும் மெட்ராஸ்

வயிற்றிலோ ஆறு மாத சிசு
வாசலீலோ அரைஅடி தண்ணீர்

ஏழாமாசம் வளைகாப்பு
எட்டு திக்கும் வெள்ளகாடு

மிதக்கும் மெட்ராஸ் ஊரினிலே
முழுகாமல் நானு மிதக்குறேனே

வளைகாப்புக்கு வந்த சொந்தம்
வாயடச்சு போனதம்மா

சட்டி சட்டியா காப்பு சோறு
வட்டி வட்டியா திண்ண சோறு

எல்லாம் வீணா போனதம்மா
வெள்ளம் வந்து புகுந்ததம்மா

கதிரவன் வெளிச்சம் இல்லையம்மா...
கரண்டு  வெளிச்சம் இல்லையம்மா...

கருங்கும் இருட்டு எங்கும்
கண்ணுமுண்ணு தெரியலீங்க

மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து
தலைவாழை விரித்து வைத்து

ஏழு சோறு பந்தி வைச்சு
எட்டு டஜன் விளையலிட்டு

வந்த ஜனம் நனைந்து நடக்க
வாயும் வயிறுமா நா கிடக்க

மழை வெள்ளம் பெருக்கெடுக்க
மெட்ராசோ அதில் மிதக்க

என் தகப்பனோ மகள் கையை பிடிக்க
என் கணவனோ மனைவியை ஏந்த

இருவரும் எனை கைதாங்கலாக
முழுகாமல் இருக்கும் எனை மூழ்கடிக்கும் நீரோ

கருவில் உள்ள குழந்தை இழுத்து வாரி போக
கண்டபடி ஓடும் காட்டு வெள்ளம் போல

இடுப்பு வரை நீண்ட வெள்ளத்தில்
சிசுவும் மிரள தாயும் மிதக்க பள்ளத்தில்

இடராது பக்குவமாக நடக்க
கணவனும் தகப்பனும் நனைக்க

சொந்த பந்தம் எல்லாம் கலங்க
தப்பிபிழைத்து ஊரு போய் சேர

பத்து மாதம் பத்திரமாய்
பிள்ளை பிறந்தது ரத்தினமாய்

மறக்க முடியாத நினைவுகள்


கார்த்திகா சுந்தர்







 கார்த்திகா சுந்தர்




No comments:

Post a Comment