விரும்பாத நொடியில்
பிடிக்காத சுடியில்
உறவுகளின் நடுவில்
அமைதியின் வடிவில்
சூழ்நிலையின் பிடியில்
ரோஜா மலராய் செடியில்
முத்தாய் வந்த முத்துச்சுடரில்
மனதை உருக்கிய உன் சிறு பார்வை
மெழுகாய் கரைந்த அழகு பதுமை
மனமுருகி உன் கையால் மல்லிகை சூடி
பந்தங்கள் எல்லாம் சொந்தங்களாக
முதல் காதல் மனதில் பூக்க
முழு வேகமாய் மாதங்கள் ஓடிட
முகூர்த்த நாளே வந்து நிற்க
இடிகள் இடிக்க மேளங்கள் முழங்க
வெடிகள் வெடிக்க நாதம் இசைக்க
ரோஜா மாலை விழும் வேளை
எனக்கு தங்க வளையம் நீ விரலில் சூட
இருமனம் சேரும் திருமணம் நாளை...
விடியும் பொழுது கனவாய் இருக்க
முத்து விழியும் பதுமை பெண்ணும்
தூங்கா இரவும் காதல் கனவும்
உனக்கும் எனக்கும் நடுவே ஓட
சூரியன் உதிக்க காதல் மலர
கோபுரம் அடியில் முருகன் அருளால்
நீ மாலை சூடி தாழி ஏந்தி
எனை பார்த்த அந்த நொடி
உச்சி சிலிர்க்க பாதம் கூச
வெட்கம் கலந்து என் முகம் சிவந்து
தாழி வாங்க தலை குனிந்து
மாலை மாற்றி மெட்டி சூடி
அருந்ததி பார்த்து அக்கினி சுற்றி
சுற்றமும் நட்பும் மகிழ்ந்தே வாழ்த்த
உன் சுண்டு விரலால் என் கைவிரல் கோர்த்து
இறைவனை துதித்து இருமனம் கலந்து
நூறு ஆண்டுகள் காதல் பறவையாய் பறப்போம் வாராய்...
முத்து கணவா
முதல் காதல்
மலர்ந்தது நெனைவா....
என்றும் உன் காதல் பொண்டாட்டி....
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment