Sunday, 21 October 2018

சோத்து கனவு

உங்கள் கனவுகளை உழுது விடுங்கள்
எண்ணங்களை விதையாய் நட்டு விடுங்கள்

செயல்களை உரமாய் தூவி விடுங்கள்
கண்ணீரை நீராய் பாய்ச்சி விடுங்கள்

ஏக்கத்தை காலங்களாக காக்க விடுங்கள்
துரோகத்தை பக்குவமாய் களை எடுங்கள்

அன்பை ஆசையாய் அறுவடை செய்யுங்கள்
பாசத்தை பதமாய் பதர் அடியுங்கள்

உழவு கனவு பலித்திடுமே
உள்ளங்கள் மகிழ்ச்சி கொண்டிடுமே

சந்ததி சோறு தின்னிட
சாகும் வரை உழைத்திட
கனவு என்றும் பலித்திட
ஆசை கொண்டேன் மனதிலே...

கார்த்திகா சுந்தர்


No comments:

Post a Comment