Friday, 19 October 2018

முந்தானை தூழி

பாட்டி வீட்டு தோட்டம்
தாத்தா நட்ட மரங்கள்

பச்சை பசுமை சோலை
பூத்து குலுங்கும் வேளை

பரீட்சை முடிந்தா போதும்
சிட்டாய் பறப்போம் பாரு

 பேரன் பேத்தி எட்டு
விடுமுறை நாளோ பத்து

பாட்டி சேலையை வெட்டி
தாத்தா கட்டும் தூழி

ஆட்டம் போடும் சுட்டி
முந்தானை தூழி கட்டி

பிறந்த வீடும் அதுவே
வளர்ந்த வீடும் அதுவே

பாட்டி சேலையில் தூழி
பேத்தி தூங்கும் லாலி

முந்தானை தூழி வாசம்
மறவா நினைவின் நேசம்...
கார்த்திகா சுந்தர்





No comments:

Post a Comment