நில வேம்பு கஷாயம் யாரெல்லாம் குடிக்கவே கூடாது என பார்க்கலாம்
1வயது முதல் 7வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் நிலவேம்பு கசாயத்தை மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் பருக கொடுக்க கூடாது.
இதே போல தான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டு கஷ்டப்படும் நபருக்கு நிலவேம்பு கசாயம் தரவே கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இது நில வேம்பு மூலிகை இலையின் படம்.
1ஸ்பூன் நில வேம்பு கசாய பொடி
இரண்டு டம்ளர் தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் போட்டு தொடர்ந்து
15 நிமிடங்கள் கொதிக்க வைத்து விட வேண்டும்.
பின் சிறிது நேரத்தில் நன்கு ஆறியதும் சுத்தமான பருத்தி துணி பயன்படுத்தி நன்கு வடிகட்டி 50 மில்லி அளவு பருகவும்.
இந்த நில வேம்பு மூலிகை கஷாயத்தை காலை மற்றும் மாலை என இரண்டு தடவைகள் குடிக்க வேண்டும்.
நில வேம்பு கஷாயம் யாரெல்லாம் குடிக்க வேண்டும் என பார்க்கலாம்
உங்கள் இல்லத்தில் யவருக்காது டெங்கு காய்ச்சல் வந்தது என அறிந்த உடனே இல்லத்தில் இருக்கும் மற்றவர்களும் அவருடன் இனணந்து நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும்.
யாரெல்லாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக காய்ச்சல் வந்த நாளே தாமதிக்காமல் நிலவேம்பு கசாயம் செய்து குடிக்க வேண்டும்.
இவை அனைத்தும் மருத்துவர் பரிந்துரையை கேட்டு செய்ய வேண்டும்.
நிலவேம்பு கசாயம் எவ்வாறு சாப்பிட வேண்டும்?
நில வேம்பு கஷாயம் பருக எந்த வித பத்தியம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த கசாயத்தை தினமும் காலை குடிக்க வேண்டும்.அதுவும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் காலை உணவு சாப்பிட்டு இருக்கும் பட்சத்தில் காலை உணவு சாப்பிட பிறகு ஒரு மணி நேரம் கழித்த பின்தான் கஷாயம் பருக வேண்டும்.
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 30 மில்லி அளவும் 10வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் 50 மில்லி அளவும் பருகலாம்.
நில வேம்பு கசாயம் பருகிய பிறகு ஒரு மணி நேரம் கழித்த பிறகு வழக்கமாக சாப்பிடும் உணவுவை உண்ண வேண்டும்.
நில வேம்பு கசாயத்தின் அத்தனை மருந்துவ பலன்கள் முழுவதையும் நம் உடல் பெறுவதற்கு , கசாயம் பருகிய அன்று எளிதில் செரிமானம் ஆக கூடிய சைவ உணவினை சாப்பிட வேண்டும்.
நில வேம்பு கசாயம் பருகிய தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது.
சாப்பிட கூடாத உணவுகள்
மீன்
முட்டை
கோழிக்கறி
கருவாடு
பாகற்காய்
அகத்திக் கீரை
ஆகிய உணவு வகைகள் தவிர்க்க வேண்டிவை ஆகும்.
அரசு மருத்துவமனைகள்
ஆரம்ப சுகாதார மையங்கள்
அரசு சித்த மருத்துவ பிரிவுகளில் நிலவேம்புக் கசாயம் பொது மக்களுக்கு இலவசமாக கொடுக்கபடுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால் சித்த மருத்துவரின் ஆலோசனை கேட்டு நிலவேம்புக் கசாயம் மருந்தை உட்கொண்டால் டெங்கு காய்ச்சல் முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.
நில வேம்பு கசாயம் டெங்கு காய்ச்சல் மட்டும் இன்றி நமது உடலில் இன்னும் பல தீர்வு தருகிறது.
தீர்வு தரும் பிரச்சினைகள்
வயிற்று பெரும்மல்
காய்ச்சல்
சர்க்கரை அளவு
ரத்த அழுத்தம்
மஞ்சள் காமாலை
மலச்சிக்கல்
போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும்.
சாதாரணமாக காய்ச்சல் பாதிப்பு இல்லாத நாட்களிலும் நாம் அனைவரும் நிலவேம்புக் கசாயத்தை எடுத்து கொள்ளலாம்.
நிலவேம்பு கசாயத்தை தினம் எத்தனை தடவை குடிக்க வேண்டும்
டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் தினமும் 2 தடவை 30 மில்லி முதல் 50 மில்லி வரை தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும்.காய்ச்சல் இல்லாதவர்கள் தினமும் 1 முறை 7 நாடகள் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும்.
நிலவேம்பு கசாயம் நம் உடலுக்கு அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் தடுத்து கட்டுப்படுத்த செய்கிறது.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு நன்மை பயக்கும்.
மிக சிறந்த மூலிகை நிலவேம்பு.
கார்த்திகா சுந்தர்.
No comments:
Post a Comment