Friday, 19 October 2018

எந்திர பறவை

வான் முட்டும் எந்திர பறவையே
உனை சிறகடிக்க சொன்னது யாரோ

என் குழந்தை தூங்கும் நேரம்
உனை சத்தமாய் பறக்கவிட்டது யாரோ

சிறு குழந்தை உனை ரசிக்கும் முன்
புகையை கக்கிவிட்டு பறந்தது ஏனோ

தத்தி தவழ்ந்து வரும் முன்பே
விமான பறவையே பறந்துவிட்டாயே

எந்திர பறவை நீ மறைய
எச்சம் ஈடும் காகம் வானில் பறக்க

விமானம் என்று குழந்தை சிரிக்க
அம்மா நானே சேர்ந்தே மகிழ்ந்தேன்...
கார்த்திகா சுந்தர்
 



No comments:

Post a Comment