Wednesday, 31 October 2018

சர்தார் வல்லபாய் படேல்க்கு ஒற்றுமைகான சிலை.

சர்தார் வல்லபாய் படேல்க்கு ஒற்றுமைகான சிலை


          இந்தியாவின் இரும்பு மனிதர் என்று பெருமையோடு நம் அனைவராலும் அழைக்கப்படுபவர்.


          இந்தியாவின் முதல் முதலாவது உள்துறை மந்திரியான நம் சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு அதிபிரமாண்டமான உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. 
          
          நர்மதா சரோவர் அணையின் அருகில் சாது பேட் என்கிற சிறுதீவில் சர்தார் சிலையை அமைக்கப்பட்டுள்ளது.

          சர்தார்  வல்லபாய் படேல் நினைவாக குஜராத்தில் இருக்கிற நர்மதா நதிக்கரையில் அவருடைய 143 வது பிறந்த நாள் தினத்தில் ஒற்றுமைக்கான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

          நம் பாரத பிரதமர் மோடி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்த சர்தார் வல்லபாய் படேல் திருஉருவசிலை உலகிலேயே மிக அதிக உயரம் கொண்ட சிலை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் அளவு 182 மீட்டர் ஆகும்.



          நம் சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாட்டினை ஒன்றுபடுத்தியதை குறிப்பிட தக்க வகையில்  ‘ஒற்றுமைக்கான சிலை’ என அனைவராலும் பெருமையோடு அழைக்கப்படுகிறது.

சிலையின் விவரங்கள்

          சர்தார் சிலையின் உயரம் 182 மீட்டர். உலகில் மிக உயரம் கொண்ட சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அழைக்கப்படுகிறது.



         மிக குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்காவில் இருக்கிற சுதந்திர தேவி சிலையை விடவும் 2 மடங்கு உயரம் உடையது.

         சர்தார் சிலையை வடிவமைக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் ஆயிரக்கணக்கான டன் எக்கு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. படேல் சிலையினுடைய வெளிப்புற அழகு பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் உபயோகபடுத்தப்பட்டுள்ளது.

          சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இந்த பிரம்மாண்டமான சிலையை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்து இந்திய நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். 

          சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தவுடன், நம் இந்திய விமானப்படைக்கு உரிய மூன்று விமானங்கள் வானத்தில் பறந்து சென்று, தேசிய கொடியின் மூன்று வண்ணங்களால் ஆன கலர் பொடிகளை வானில் தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கி பறந்தன.

          இந்திய நாட்டின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் சிலையின் அருகே அமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரை பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். 

          அந்த நேரத்தில் மூன்று இந்திய போர் விமானங்கள், அந்த சுவரின் மேலே சற்று தாழ்வாக பறந்து சென்றது. படேல் சிலைக்கு பிரதமர் அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அந்த தருணத்தில், மி-17 ரகத்தை சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் கொண்டு சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மீது மலர்கள் தூவிவிடப்பட்டது. 

சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;-

            சர்தார்  வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


         நம்  இந்தியாவை உருவாக்கியவர், சர்தார் வல்லபாய் படேல். இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். நான் இந்த பிரம்மாண்டமான சர்தார் திருவுருவ சிலையை திறந்து வைத்ததை மிகவும் கவுரவமாக எண்ணுகிறேன்.

           குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அரசு தொடங்கிய இந்த சிறந்த முயற்சிக்கு இந்தியா முழுவதும் இருந்து பல விவசாயிகள் நல்ல ஆதரவு அளித்தனர்.
    
          பல லட்சக்கணக் விவசாயி மக்கள், தங்களுடைய விவசாய கருவிகள் இரும்பு மற்றும் மணலை சிலை தயாரிக்க கொடுத்தனர் என்று  கூறி பேசினார்.

          நம் பாரத இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர் வல்லபாய் படேல். இந்தியர்கள் அனைவரும் இந்த பொன்னான தருணத்தை மகிழ்ந்து கொண்டாடி வருகின்றார்கள். அன்று சர்தார் படேலின் பெரும் முயற்சிகள் தான் இன்றைய நமது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

           சுதந்திரம் பெற்றதும், படேல் எடுத்த முயற்சிகள் தான் இவை. இந்த விழா, இந்திய நாட்டின் வரலாற்றில் மிகமிக முக்கியமான சிறப்பு வாய்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது.

          சுதந்திர இந்தியாவை சர்தார் வல்லப்பாய் படேல் ஒருங்கிணைத்த சிற்பி என அழைக்கப்படுகிறார். 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை  எல்லாம் இவர் ஒருங்கிணைத்து இன்றைய ஒற்றுமையான ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கி உள்ளார். 
  
          சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோராலும் பெருமையோடு  அழைக்கப்படுகிறார்.

          நாமும் அவரது கொள்கைகளை பின்பற்றி இந்த இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு வழிகோலும் வகையில் என்றென்றும் நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம். நாட்டின் இறையாண்மை காப்போம்.

          வாழ்க பாரதம்
          ஜெய்கிந்
கார்த்திகா சுந்தர்

Monday, 29 October 2018

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரம் 2018

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரம்  2018


     அனைத்து மக்களும் இனிய தீப திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

      இந்த ஆண்டு தீப திருநாள் அன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

     தீப திருநாளில்  பட்டாசுகள் வெடித்து மகிழ உத்தரவிடப்பட்ட கால நேரம் தொடர்பாக நம் தமிழக அரசு தற்போது மனுவை தாக்கல் செய்து உள்ளது.
      
          இந்தியா நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்து மகிழ தடை விதிக்க வேண்டி கோரியை முன் வைத்து போடப்பட்ட வழக்குகளை எல்லாம் நம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி உள்ளது. 
     
           இத்தகைய வழக்கு விசாரணை முடிவில் நீதிமன்றம் பட்டாசுகள் தயாரிக்கவும், அவர்கள் பட்டாசுகளை விற்கவும் செய்யலாம்.

         பட்டாசுகள் போட தடை எதுவும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது.
ஏகப்பட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்  விதித்துள்ளது. 

         அது என்னவென்றால் தீப திருநாளில் இரவு நேரத்தில் 8 மணிக்கு தொடங்கி 10 மணி அளவு வரை பட்டாசுகள் வெடிக்கலாம்.

          மொத்தம் 2 மணி நேரம் மட்டும் அனைவரும் பட்டாசுகள் வெடிக்கலாம். அதுவும் வெடிக்கப்படும் ஒவ்வொரு வெடிகளும் அரசு அனுமதி வழங்கிய அளவுகளில்  மட்டுமே இருத்தல் கட்டாயமாகும்.

          பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் சத்தம் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழலின் பாதிப்பு  ஆகியவை குறித்து அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் அளவீடு செய்ய வேண்டும். 

         சுற்றுச்சூழலுலின் பாதுகாப்பு கருதி மாசு ஏற்படுத்தாத வகையில் பட்டாசுகள் தயாரிக்க தக்க நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

          அரசு தடை விதித்ததுள்ள எந்த ஒரு வகை பட்டாசுகளையும் பொது மக்கள் வெடிக்க அனுமதி கிடையாது என முக்கிய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு நீதிமன்றம் விதித்துள்ளது. 

          இத்தகைய சூழ்நிலையில் இந்த வருடம் தீப திருநாள் அன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட  2 மணி நேரங்களுக்கு பதிலாக மேலும் அதிகபடியாக நேரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து உச்சநீதிமன்றத்தில் நம் தமிழக அரசு மனுவை தாக்கல் செய்துவிட்டது.

          தீப திருநாள் அன்று காலை 4 மணி முதல் 6 மணி வரை அதிகாலை வேளையில் பட்டாசு வெடித்து கொண்டாட  அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு நீதிமன்றத்திற்கு  வலியுறுத்தல் செய்துள்ளது.

         மக்கள் இந்த ஆண்டு தீப திருநாள் கொண்டாட்டதில் பல மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

         அனைவரும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.எனவே அளவான பட்டாசுகள் வெடித்து மாசு வெளிப்பாடு குறையும் வகையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட வேண்டும். 

          குழந்தைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து கொண்டாட பெற்றோர்கள் உதவ வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். 
          
          அனைவருக்கும் பாதுகாப்பான இனிய தீப திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

கார்த்திகா சுந்தர்.

         

Friday, 26 October 2018

நிலவேம்பு யாரெல்லாம் குடிக்கக்கூடாது ,கசாயம் செய்முறை, சாப்பிடும் முறை




நில வேம்பு கஷாயம் யாரெல்லாம் குடிக்கவே கூடாது என பார்க்கலாம்


   
        1வயது முதல் 7வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் நிலவேம்பு கசாயத்தை மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் பருக கொடுக்க கூடாது.
      இதே போல தான்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டு கஷ்டப்படும் நபருக்கு நிலவேம்பு கசாயம் தரவே கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இது நில வேம்பு மூலிகை இலையின் படம்.



நில வேம்பு கசாயம் செய்முறை

1ஸ்பூன் நில வேம்பு கசாய பொடி

இரண்டு டம்ளர் தண்ணீர்

     ஒரு பாத்திரத்தில் போட்டு தொடர்ந்து
15 நிமிடங்கள் கொதிக்க  வைத்து விட வேண்டும்.
     
     பின் சிறிது நேரத்தில் நன்கு ஆறியதும் சுத்தமான பருத்தி துணி பயன்படுத்தி நன்கு வடிகட்டி  50 மில்லி அளவு பருகவும்.
  
     இந்த நில வேம்பு மூலிகை கஷாயத்தை காலை மற்றும் மாலை என இரண்டு தடவைகள் குடிக்க வேண்டும்.

நில வேம்பு கஷாயம் யாரெல்லாம் குடிக்க வேண்டும் என பார்க்கலாம்

     உங்கள் இல்லத்தில்  யவருக்காது  டெங்கு காய்ச்சல் வந்தது என அறிந்த உடனே இல்லத்தில் இருக்கும் மற்றவர்களும் அவருடன் இனணந்து நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். 

     யாரெல்லாம்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக காய்ச்சல் வந்த நாளே தாமதிக்காமல் நிலவேம்பு கசாயம் செய்து குடிக்க வேண்டும். 

     இவை அனைத்தும் மருத்துவர் பரிந்துரையை கேட்டு செய்ய வேண்டும்.

நிலவேம்பு கசாயம் எவ்வாறு சாப்பிட வேண்டும்?

     நில வேம்பு கஷாயம் பருக எந்த வித பத்தியம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

    இந்த கசாயத்தை தினமும் காலை குடிக்க வேண்டும்.அதுவும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

     ஒருவேளை நீங்கள் காலை உணவு சாப்பிட்டு இருக்கும் பட்சத்தில் காலை உணவு சாப்பிட பிறகு ஒரு மணி நேரம் கழித்த பின்தான் கஷாயம் பருக வேண்டும். 

     10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 30 மில்லி அளவும்  10வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் 50 மில்லி அளவும் பருகலாம்.  

      நில வேம்பு கசாயம் பருகிய பிறகு ஒரு மணி நேரம் கழித்த பிறகு வழக்கமாக சாப்பிடும் உணவுவை உண்ண வேண்டும்.

    நில வேம்பு கசாயத்தின் அத்தனை மருந்துவ பலன்கள் முழுவதையும் நம் உடல் பெறுவதற்கு , கசாயம் பருகிய அன்று எளிதில் செரிமானம்  ஆக  கூடிய சைவ உணவினை சாப்பிட வேண்டும்.     

     நில வேம்பு கசாயம் பருகிய தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது.

சாப்பிட கூடாத உணவுகள்

மீன்
முட்டை 
கோழிக்கறி 
கருவாடு
பாகற்காய்
அகத்திக் கீரை 
ஆகிய உணவு வகைகள் தவிர்க்க வேண்டிவை ஆகும். 

அரசு மருத்துவமனைகள்
ஆரம்ப சுகாதார மையங்கள்
அரசு சித்த மருத்துவ பிரிவுகளில்  நிலவேம்புக் கசாயம் பொது மக்களுக்கு இலவசமாக கொடுக்கபடுகிறது.   

      டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால் சித்த மருத்துவரின் ஆலோசனை கேட்டு நிலவேம்புக் கசாயம் மருந்தை உட்கொண்டால் டெங்கு காய்ச்சல் முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.   

     நில வேம்பு கசாயம் டெங்கு காய்ச்சல்  மட்டும் இன்றி நமது உடலில் இன்னும் பல தீர்வு தருகிறது.

தீர்வு தரும் பிரச்சினைகள்

வயிற்று பெரும்மல்
காய்ச்சல்
சர்க்கரை அளவு
ரத்த அழுத்தம்
மஞ்சள் காமாலை
மலச்சிக்கல்

 போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். 

 சாதாரணமாக காய்ச்சல் பாதிப்பு இல்லாத நாட்களிலும் நாம் அனைவரும் நிலவேம்புக் கசாயத்தை எடுத்து கொள்ளலாம். 


நிலவேம்பு கசாயத்தை தினம்  எத்தனை தடவை குடிக்க வேண்டும்  

     டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் தினமும் 2 தடவை  30 மில்லி முதல் 50 மில்லி வரை தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும்.      

     காய்ச்சல் இல்லாதவர்கள்  தினமும் 1 முறை 7 நாடகள் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். 

     நிலவேம்பு கசாயம் நம் உடலுக்கு அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் தடுத்து கட்டுப்படுத்த செய்கிறது.

     நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு நன்மை பயக்கும்.     

மிக சிறந்த மூலிகை நிலவேம்பு.

கார்த்திகா சுந்தர்.

Thursday, 25 October 2018

டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறை வீட்டு வைத்தியம்

வணக்கம் நண்பர்களே...


டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டிய வழி முறைகள் இதோ உங்களுக்காக:





     நம்மை தினமும் கொசுக்கடி பிரச்சனையில் இருந்து விடுபட கொசு மருந்து ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் உபயோகிக்க வேண்டும்.

   கொசு வலைகள் கட்டி இரவில் படுத்து தூங்க வேண்டும்.

    நம் வீட்டில் உள்ள அனைத்து ஐன்னல் மற்றும் கதவுகள் மற்றும் இதர கொசு வரும் பாதையை கொசு வலைகள் கொண்டு அடைத்து தைக்க வேண்டும்.



     மழை காலங்களில் தினமும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் அல்லது கொசு அதிக அளவில் வரும் நேரங்களில் வேப்பிலை கொண்டு புகை மூட்டம் போட்டு இந்த வாசனை வீடு முழுவதும்  பரவுமாறு செய்யும் போது கொசு அண்டாது.

     இந்த முறையில் நொச்சி இலை பறித்து புகை மூட்டம் போட்டு விட்டு  கொசு அதிக அளவில் வருவதை தடுக்கலாம்.

     நம் குழந்தைகள் தூங்க செல்லும் முன் மற்றும் மாலை வேளைகளில் வெளியில் விளையாடுவதற்க்கு போகும் பொழுதும் முழுகால் மறைக்கும் வகையில் பாவாடை ,போன்ட் மற்றும் முழுகை மேலாடை போன்ற கொசுவிடம் இருந்து பாதுகாக்க கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு போக வேண்டும்.

     சாயங்காலம்  வேலையில்  அதுவும் 5 மணி முதல் 8 மணி வரை நமது இல்லத்தின் அனைத்து சன்னல் மற்றும் துவாரம், கதவுகளை எல்லாம் அடைத்து வைத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.

     உங்கள் இல்லங்களைச் சுற்றி உள்ள இடங்களில் எல்லாம்  தண்ணீர் தேங்கிய நிலையில் இல்லாமல் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.

      மழை காலங்களில் குண்டு, குழியில் தண்ணீர் தேங்கிய நிலையில் இல்லாமல் கவனித்து கொள்ள வேண்டும்.
   
     அவ்வாறு தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ள போது உடனே சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.கொசு முட்டை இடுவதை தவிர்க்க முடியும்.

சுற்றுச்சூழலை தூய்மையான நிலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பின் விளைவு மற்றும் அறிகுறிகள்..

  1. பசி இல்லாமல் இருக்கும்
  2. பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வடியும்
  3. மாதவிடாய் அதிக அளவில் இருத்தல் 
  4. தொண்டைப்புண்கள்
  5. சிறுநீரில் இரத்தம் கலந்து சிறுநீர் கழிக்கும் நிலை
  6. தோலில் அரிப்பு ஏற்படும்
  7. வெள்ளை அணு எண்ணிக்கைக் குறைய ஆரம்பிக்கும் தலைவலி ஏற்படும்
  8. கண் வலி ஏற்படும்
  9. பொதுவாக உடலில் வலி ஏற்படும்
  10. பலருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும்
  11. தசை வலி உண்டாகும்
  12. மூட்டு வலி ஏற்படும்
  13. குமட்டல் போன்றவை ஏற்படும்
  14. வாந்தியும் இருக்கும்
  15. வயிற்றுக்கடுப்பு உண்டாகும்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியவை:



       சாதாரணமாக காய்ச்சல்தானே என எண்ணி அலட்சியமாக  இருந்து விட கூடாது.

       லேசாக காய்ச்சல் இருக்கும் எனில் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று  மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

       காய்ச்சல் இருந்தால் நமது உடலுக்கு தேவைப்படும் நீர் சத்து போதுமான அளவு இருத்தல் அவசியம். 

      பழசாறு , பானகங்கள், நீச்சதண்ணி மற்றும் குடிநீர் அருந்தி உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறையாது கவனமுடன் பார்த்து  கொள்ள வேண்டியது அவசியம்.

     கருப்பு நிறத்தில் மலம் கழிக்கும் நிலை வந்தால் உடனே அரசாங்க  மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

      தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக   மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

      1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 4 டம்ளர் அளவு நீர்ச்சத்து உடலுக்கு தேவைப்படும்.
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 க்ளாஸ் அளவு நீர்ச்சத்து உடலுக்கு தேவைபடும்.

        குழந்தைகள் சோர்வு அடையாது இருக்க உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடக்க வேண்டும்.

       அதிக காய்ச்சல் இருக்கும் போது சரியான கால இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றுமாறு கவனித்து கொள்ள வேண்டும்.
வீட்டு வைத்தியம்


நிலவேம்பு கஷாயம் வைத்து காலை மாலை என இரு முறை வாரத்திற்கு இரண்டு தடவைகள் 1/2 டம்ளர் பருக வேண்டும்.

 ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்த பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே...

வாழ்க வையகம்

கார்த்திகா சுந்தர்.

Wednesday, 24 October 2018

வீட்டில் இருந்து மாதம் 60000ரூ சம்பாதிப்பது எப்படி

வணக்கம் நண்பர்களே
மலரட்டும் புன்சிரிப்பு
வாழ்க வையகம்

தினம் தினம் வீட்டில் இருந்து வேலை செய்யும் அறிய வாய்ப்பு உள்ளது. பெண்கள் ஆண்கள் என அனைவரும் எளிதாக உங்கள் சொந்த முயற்சியில் வெற்றி பெற முடியும்.

இதற்கு நான் மிக எளிய முறையில் தொழில் தொடங்க மிக அருமையான வழி முறைகளை பகிர்கிறேன்.

வீட்டில் இருந்து மாதம் 60000ரூ சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு தையல் இயந்திரம் தேவை. சுடிதார் மட்டுமே தைக்க தெரிந்தால் போதும்.

தினம் தினம் 4 சுடிதார் மட்டுமே தைக்க வேண்டும். போதும். ஒவ்வொரு சுடிதார் தைக்க உங்களுக்கு தேவையான நேரத்தை பார்க்கலாம்.

அளவு எடுத்து துணிகளை எடுத்து வெட்ட தேவையான நேரம் 20 நிமிடங்கள்.

சுடிதார் தைக்க தேவையான நேரம் ஒரு மணிநேரம் அதிகபட்சம் தேவைப்படும்.

மீதி பத்து நிமிடம் நாடா கயிறு கோர்த்து மணிகள் ஏதாவது வைத்து அழகு படுத்தும் விதமான வேலை செய்யுங்கள்.

வருமானம்
ஒரு சுடிதார் தைக்க கூலி 500 ரூபாய்
ஒரு நாளைக்கு வெறும் 4 சுடிதார்
ஒரு நாளைக்கு 2000 ரூபாய்

வேலை செய்யும் நேரம்  6 மணி நேரம்




இவை மாதிரி படங்கள்.
இணையத்தில் நிறைய மாதிரி படங்கள் எல்லாம் கிடைக்கும்.

நிறைய தகவல்கள் உங்களுக்கான பயிற்சிக்கு உதவும்.

உங்கள் கடின உழைப்பு என்பது உங்கள் சொந்த முயற்சியில் ஈடுபாடு கொண்டு வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

மாதம் 60000 முதல் 100000 ரூபாய் வரை வீட்டில் இருந்து மாதம் சம்பாதிக்க முடியும்.

உங்கள் விடமுயற்சி தன்னம்பிக்கை போதும் எளிதில் சம்பாதிக்க முடியும்.

இப்போது நாம் அனைவரும் தீபாவளி திருநாள் பண்டிகை எதிர்பார்த்து காத்திருக்கும் அரிய நாட்கள்.

பண்டிகை காலங்களில் அதிக அளவில் தைக்க ஆட்கள் தேவை என அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையை நாம் பென்னான வாய்ப்பாக அமைத்து அதில் அதிக அளவில் வருமானம் ஈட்ட வேண்டும்.

நிறைய ஆர்டர்கள் கிடைக்க அதிக அளவில் தைக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு லையநிங் சுடிதார் தைக்க உங்களுக்கு தேவையான நேரத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

லேஸ் வைத்து தைக்க தனி கூலி கிடைக்கும்.
கற்கள் மற்றும் எம்பிராய்டரி செய்ய கூடுதல் கூலி கிடைக்கும்.

புதிதாக தைக்க பழகும் போது இரண்டு மாதங்கள் வரை வீட்டில் யூ டுயூப் மூலம் கற்கவும் கற்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.

புதிதாக தைக்க பழகும் போது செலவுகள் அதிகரிக்கும் என அனைவரும் அறிந்ததே.

ஆனால் நான் கூறிய யோசனை படி சுயமாக கற்றல் முறை எளிதாக இருக்கும். நீங்கள் தையல் வீடியோ பார்க்க பார்க்க எளிதாக கற்க முடியும்.

சுயமாக தொழில் தொடங்க சிறந்த யோசனைகள் இது என நம்புகிறேன்.

அனைவரும் எளிதாக உங்கள் சொந்த உழைப்பில் முன்னேற வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியுடன் முன்னேற்ற பாதையில் செல்ல அனைத்து நலமும் வளமும் பெற்று இறை ஆசியுடன் நல்லதொரு வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.


மேலும் நிறைய அருமையான பயனுள்ள புதிய தகவல்கள் உங்களுக்காக.... நமது தண்டோரா தமிழச்சி ல்.
 கார்த்திகா சுந்தர்.

நன்றிகள் பல
வணக்கம் நண்பர்களே...


தீபாவளி தல தீபாவளி


இல்லங்கள் தோறும் தீபாவளி
இனியதாய் மகிழும் தீபாவளி...

ஊரே வெடிக்கும் பட்டாசு
புதுமாப்பிள்ளையோ இங்கு மிட்டாசு


புத்தாடை அணிந்து ஜொலிஜொலிப்பு
மத்தாப்பு போட்டு கலகலப்பு...

புதுமாப்பிள்ளை மிடுக்கு ஏராளம்
மாமியார் கவனிப்போ தாராளம்
தலதீபாவளி கொண்டாட்டம்

கார்த்திகா சுந்தர்

Tuesday, 23 October 2018

கண்ணில் எடுத்த போட்டா


குட்டி தேவதை
ஊஞ்சல் ஆடும் அழகை
போட்டா எடுக்க செல்லி
அப்பாக்கு கட்டளையிட்டது

அப்பா போன்ல எடுக்கிற போட்டா
என்னைக்கினா அழிஞ்சுருது

அப்பா கண்ல எடுக்கிற போட்டா
என்னைக்கும் அழியாது

அப்பா பொண்ணு எடுக்கிற போட்டா
என்றைக்கும் அழகானது

என பேசிகொள்ளும்  சிறு பேச்சு அழகு.....
கார்த்திகா சுந்தர்